பதிவு:2022-12-24 21:28:10
திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா,பெஞ்சமின் பங்கேற்பு :
திருவள்ளூர் டிச 23 : திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் திருவள்ளூரில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.வி.ரமணா தலைமை தாங்கினார் திருவள்ளூர் நகர செயலாளர் ஜி.கந்தசாமி வரவேற்றார்.இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சரும், மத்திய மாவட்ட செயலாளருமான பா.பென்ஜமின் கலந்து கொண்டு கிறிஸ்துமஸ் கேக் வெட்டி குழந்தைகளுக்கு ஊட்டி மகிழ்ந்தார். அதனைத் தொடர்ந்து ஏழை எளிய பெண்களுக்கு இலவச சேலையும், கிறிஸ்தவ மத போதகர்களுக்கு பேண்ட், சட்டை ஆகியவற்றையும் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் போதகர் சாம்சன் ராஜா கலந்து கொண்டு கிறிஸ்துமஸ் செய்தி சொல்லி சிறப்பித்தார். இந்நிகழ்ச்சியில்பேசிய முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, அதிமுக தன் சொந்த செலவில் சிறுபான்மையினருக்கான விழாக்களை நடத்தி கவுரவித்து வருவதாகவும், ஆனால் திமுகவினர் சிறுபான்மையினர் நடத்தும் விழாவில் பங்கேற்பதையே வாடிக்கையாக கொண்டிருப்பதாக தெரிவித்தார். ஒரு புறம் மத்திய அரசை திட்டிக் கொண்டே அவர்களது காலை வருடி ஆட்சியை நடத்துவதாகவும் குற்றம் சாட்டினார். நடைபெற நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றத்தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற கிறிஸ்துவர்கள் ஜெபம் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். சிறுபான்மையின மக்களுக்காக அதிமுக தொடர்ந்து பாதுகாப்பாக இருப்போம் என்றும் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நாங்கள் தொடர்ந்து உறுதுணையாக இருப்போம் என்றும் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் பா.பென்ஜமின், புரட்சித் தலைவர் ஏழைகளின் ஒளிவிளக்காக திகழ்ந்தார் என்றும், அதே வழியில் எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும். இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும் என்ற லட்சியக் குறிக்கோளோடு வாழ்ந்து காட்டியவர் அம்மா என்றும்,பிறப்பு முதல் இறப்பு வரை ஒரு மனிதனுக்கு தேவையான திட்டங்களை கொடுத்து செயல்படுத்திய ஒப்பற்ற தலைவியாக அம்மா திகழ்ந்தார் என்றும் புகழாரம் சூட்டினார்.
அந்த வரிசையில் தற்போது இடைக்கால பொதுச்செயலாளரும் சிறப்பாக பணியாற்றியதாகவும் தெரிவித்தார். புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித் தலைவி தோற்றத்தில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி இருப்பதாகவும் புகழாரம் சூட்டினார். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் மாதவன், சூரகாபுரம் சுதாகர் மற்றும் நகர கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.