பதிவு:2022-12-24 21:44:55
புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் 35-வது நினைவு நாளை முன்னிட்டு திருவள்ளூர் மேற்கு மாவட்ட துணை செயலாளர் பல்வேறு பகுதிகளில் அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை :
திருவள்ளூர் டிச 24 : மறைந்த முன்னாள் முதல்வரும் அதிமுக எனும் பேரியக்கத்தை உருவாக்கியவருமான புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் 35-வது நினைவு தினம் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. அதன்படி திருவள்ளூர் மேற்கு மாவட்ட துணை செயலாளரும் முன்னாள் நகர்மன்றத் தலைவருமான கமாண்டோ ஏ.பாஸ்கரன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்தும் அவரது திருவுருவப் படத்திற்க மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.
அதே போல் கடம்பத்தூர் ஒன்றியம் மணவாளநகரில் ஒன்றிய கவுன்சிலர் நரேஷ் ஏற்பாட்டில் புரட்சித் தலைவரின் திருவுருவப் படத்திற்கு மாவட்ட துணை செயலாளர் கமாண்டோ பாஸ்கரன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதில் நிர்வாகிகள் எஸ்.ஏ.நேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதே போல் கழக அமைப்புச் செயலாளரும் முன்னாள் எம்பியுமான திருத்தணி கோ.ஹரி தலைமையில் திருத்தணியில் உள்ள புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா, பேரறிஞர் அண்ணா ஆகியோரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதில் ஆவின் தலைவர் கவிச்சந்திரன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பங்கேற்றனர். ஏழை எளிய மக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.