திருவள்ளூரில் முதல்வரின் முகவரி துறை குறித்து துறை துறைவாரியாக நிறைவேற்றப்பட்ட நலத்திட்டங்கள் குறித்த குறும்படம் மற்றும் புகைப்பட விளக்கம் திரையிடப்பட்டு விழிப்புணர்வு :

பதிவு:2022-12-24 21:50:02



திருவள்ளூரில் முதல்வரின் முகவரி துறை குறித்து துறை துறைவாரியாக நிறைவேற்றப்பட்ட நலத்திட்டங்கள் குறித்த குறும்படம் மற்றும் புகைப்பட விளக்கம் திரையிடப்பட்டு விழிப்புணர்வு :

திருவள்ளூரில் முதல்வரின் முகவரி துறை குறித்து  துறை துறைவாரியாக நிறைவேற்றப்பட்ட  நலத்திட்டங்கள் குறித்த குறும்படம் மற்றும் புகைப்பட விளக்கம் திரையிடப்பட்டு விழிப்புணர்வு :

திருவள்ளூர் டிச 24 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கத்தில் முதல்வரின் முகவரி துறை சார்பாக சிறப்பு குறைத்தீர்வு வாரம் 19.12.2022 முதல் 25.12.2022 வரை கடைபிடிக்கப்படுவதை தொடர்ந்து முதல்வரின் முகவரி துறை குறித்து துறைவாரியாக நிறைவேற்றப்பட்ட நலத்திட்டங்கள் குறித்த குறும்படமும் புகைப்பட விளக்கமும் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் திரையிடப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

முதல்வரின் முகவரி துறையின் “நல்லாட்சி வாரம்” 19.12.2022 முதல் 25.12.2022 வரை அனுசரிக்க அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, நமது திருவள்ளுர் மாவட்டத்தில் அனைத்து வட்டங்களின் தலைமையிடங்கள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்களில் பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு உடனுக்குடன் தீர்வு காணப்பட்டு வருகிறது. இந்நேர்வில் அரசின் உத்தரவின்படி, ஒவ்வொரு வருடமும் நல்லாட்சி வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் நல்லாட்சி வாரம் சிறப்பு விழா நடத்தப்பட்டது. இதில் கல்வி, மருத்துவம், வருவாய் துறை, ஊரக வளர்ச்சி துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்ந்த முதல் நிலை அலுவலர்கள் தங்கள் துறை சார்ந்த சிறப்பு நிகழ்வுகள் குறித்து எடுத்துரைத்தனார். மேலும் இந்த ஓராண்டில் பல்வேறு துறைகளில் ஏற்பட்ட முன்னேற்றங்கள், வெற்றிகள் குறித்த நிகழ்வுகளை தொகுத்து குறும்படமும், புகைப்பட விளக்கமும் திரையிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் சிறப்பு முயற்சியால் நமது மாவட்டத்தில் கொத்தடிமைகளாக இருந்த பழங்குடியின மக்களை மீட்டு, அவர்களுக்கு மறுவாழ்வு அளித்து அவர்களுக்கான வாழ்வாதாரத்தை அடித்தளம் அமைக்கும் வகையில் “சிறகுகள்” என்ற தலைப்பில் குறும்படம் திரையிட்டு காண்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.மேலும், முதல்வரின் முகவரித் துறையின் மூலமாக 2021-2022-ல் மொத்தம் 33,694 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. நல்லாட்சி வாரத்தில் முதல்வரின் முகவரித் துறை வாயிலாக 3,598 மனுக்களுக்கும் மின் ஆளுமை முகமை மூலம் 16,847 மனுக்களுக்கும் தீர்வு காணப்பட்டுள்ளது சிறப்பிற்குரியது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சு.அசோகன், உதவி ஆட்சியர் (பயிற்சி) செல்வி.கேத்தரின் சரண்யா மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கா.காயத்ரி சுப்பிரமணி, தனித்துணை ஆட்சியர் சி.ப. மதுசூதனன், திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் ஜெ.ஹஸ்ரத் பேகம் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.