பதிவு:2022-12-27 08:49:00
கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்திலிருந்து ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 3.5 டன் எடை கொண்ட ரேஷன் அரிசி பறிமுதல்
திருவள்ளூர் டிச 26 : திருவள்ளுர் மாவட்டத்தில் பொது விநியோக திட்டத்தின்கீழ் பொது மக்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும் பொருட்கள் கடத்தலை தடுக்கும் பொருட்டு, குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை காவல்துறை இயக்குநர் அபாஷ்குமார் உத்தரவின் பேரில் எஸ்பி கீதா மேற்பார்வையில், டிஎஸ்பி நாகராஜன் வழிகாட்டுதலின்படி இன்ஸ்பெக்டர் சதீஷ் மற்றும் போலீசாருடன் கும்மிடிப்பூண்டி இரயில்வே இன்ஸ்பெக்டர் சந்தீப் மற்றும் போலீசார் இணைந்து கும்மிடிப்பூண்டி இரயில் நிலையம் மூன்றாம் நடைமேடையில் வந்து செல்லும் ஆந்திர மாநிலம், சூளுர்பேட்டை இரயில்களில் சோதனை செய்தனர்.
அப்போது, கேட்பாரற்று இருந்த சுமார் 50 கிலோ எடைக் கொண்ட 70 மூட்டைகளில் மொத்தம் 3.500 கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து அவரை பறிமுதல் செய்து. நுகர் பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைத்தனர். மேலும் ஆந்திராவுக்கு கடத்த முயன்ற நபர்கள் யார் என்பது குறித்தும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.