திருத்தணி அருகே மழை மற்றும் பனி காரணமாக சாமந்தி பூ விளைச்சல் குறைந்து போனதால் நஷ்டம் ஏற்பட்டதாக விவசாயிகள் வேதனை

பதிவு:2022-12-27 08:54:32

திருத்தணி அருகே மழை மற்றும் பனி காரணமாக சாமந்தி பூ விளைச்சல் குறைந்து போனதால் நஷ்டம் ஏற்பட்டதாக விவசாயிகள் வேதனை

திருத்தணி அருகே மழை மற்றும் பனி காரணமாக சாமந்தி பூ விளைச்சல் குறைந்து போனதால் நஷ்டம் ஏற்பட்டதாக விவசாயிகள் வேதனை

திருவள்ளூர் டிச 26 : திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த கே.ஜி.கண்டிகையைச் சேர்ந்தவர் ஹரி. விவசாயியான இவர் தனது 2 ஏக்கர் நிலத்தில் பூக்களை பயிரிட்டு வருகிறார். இந்நிலையில் ஆந்திராவிலிருந்து சாமந்தி பூக்களுக்கான நாற்றுகளை ஏக்கருக்கு ஒரு லட்சம் வீதம் வாங்கி வந்து பயிரிட்டுள்ளார்.

வழக்கமாக ஒரு ஏக்கரில் சாமந்திப் பூ பயிரிட்டால் 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் ரூபாய் வரை லாபம் கிடைக்கும். ஆனால் தற்போது பெய்த மாண்டஸ் புயல் மழை காரணமாகவும், பனி மூட்டம் காரணமாகவும் விளைச்சல் மிகவும் குறைந்து காணப்பட்டது.

இதனால் ஒரு ஏக்கருக்கு 70 ஆயிரம் வீதம் 2 ஏக்கருக்கு ஒரு லட்சத்து 40 ஆயிரம் நஷ்டம் ஏற்பட்டதாக விவசாயி வேதனை தெரிவிக்கிறார். அரசு தரப்பில் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் விவசாயி ஹரி கோரிக்கை விடுத்துள்ளார்