வானகரத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் மற்றும் வட்டார அளவிலான சுகாதாரத் திருவிழா : திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு துவக்கி வைத்தார் :

பதிவு:2022-04-20 11:16:43



வானகரத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் மற்றும் வட்டார அளவிலான சுகாதாரத் திருவிழா : திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு துவக்கி வைத்தார் :

வானகரத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் மற்றும் வட்டார அளவிலான சுகாதாரத் திருவிழா : திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு துவக்கி வைத்தார் :

திருவள்ளூர் ஏப் 20 : திருவள்ளூர் மாவட்டம், வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியம், வானகரம் தனியார் திருமண மண்டபத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பாக நடைபெறும் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் மற்றும் வட்டார அளவிலான சுகாதாரத் திருவிழாவினை திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து, பார்வையிட்டனர்.

ஒன்றிய அரசு கடந்த வாரம் வட்டார அளவிலான சுகாதாரத் திருவிழா என்கின்ற ஒரு புதிய திட்டத்தை நாடெங்கிலும் நடத்த திட்டமிட்டு அறிவித்தது.அதன்படி, தமிழகத்தில் இருக்கின்ற 385 வட்டாரங்களிலும் வட்டாரத்திற்கு ஒரு மருத்துவ முகாம் என்கிற வகையில் ஏறத்தாழ 17 – 18 சிறப்பு மருத்துவ அமைப்புகளை கொண்ட இந்த முகாம்கள் தமிழகம் முழுவதும் நடைபெற வேண்டும்.

அந்த வகையில் 18-ம் தேதி தொடங்கப்பட்டு, வருகின்ற 30-ம் தேதி வரை 385 இடங்களிலும் இதுபோன்ற முகாம்கள் நடத்திட வேண்டும் என்று ஒன்றிய அரசு தெரிவுப்படுத்தியுள்ளது. அதன்படி திருவள்ளூர் மாவட்டம், வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியம், வானகரத்தில் முதல் முகாமை நமது முன்னாள் மத்திய ஒன்றிய அமைச்சரும், திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர். பாலு தொடங்கி வைத்தனர்.

இந்த முகாம் காலை 8 மணிக்கு தொடங்கி பிற்பகல் 4 மணி வரை நடைபெறவிருக்கிறது. எனவே, வானகரம், அடையாளம்பட்டு, அயப்பாக்கம், போரூர் போன்ற பகுதிகளில் இருக்கின்ற மக்கள் இந்த முகாம் மூலம் மருத்துவ பயனை பெற வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

விழாவில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அரசு முதன்மை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன்,மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் க.கணபதி, பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்து துறை இயக்குநர் செல்வவிநாயகம், சுகாதாரப்பணிகள் இணை இயக்குநர் எம்.ஏ.இளங்கோவன், சுகாதாரத்துறை துணை இயக்குநர்கள் கே.ஆர். ஜவஹர்லால் (திருவள்ளூர்),செந்தில்குமார் (பூவிருந்தவல்லி), உள்ளாட்சி பிரதிநிதிகள், மருத்துவர்கள், செவிலியர்கள், பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.