கடும் பனிப்பொழிவால் திருவள்ளூர் வழியாக முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு மெதுவாகச் செல்லும் ரயில்கள், திருத்தணி - சென்னை மார்க்கத்தில் ரயில்கள் தாமதம் : வாகன ஓட்டிகள் கடும் அவதி :

பதிவு:2022-12-27 17:43:55

திருவள்ளூர் டிச 27 : திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பனிமூட்டம் அதிகளவில் காணப்படுகிறது. அதே போல் இன்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதல் முதல் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக அருகே வரும் வாகனங்கள் கூட தெரியாத அளவிற்கு கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது.

அதே போல் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நேற்று மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் இன்று காலை கடும் பனிப்பொழிவுவானது நிலவி வருகிறது. இதில் திருவள்ளூர் ஈக்காடு பூண்டி கனகம்மா சத்திரம் மணவாளநகர் ஊத்துக்கோட்டை என மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் கடும் பனிப்பொழிவு காணப்பட்டது. மேலும் சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் காலை முதலே கடும் பனிமூட்டத்தால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வாகனங்களில் இருக்கும் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டப்படி சென்றனர்.

திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருப்புப் பாதையில் கடும் பனிப்பொழிவு காணப்பட்டதால் திருவள்ளூர் ரயில் நிலையம் வழியாக செல்லும் ரயில்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு மெதுவாக செல்வதால் திருத்தணி சென்னை மார்க்கத்தில் செல்லும் பயணிகள் ரயில் தாமதமாக செல்கின்றன. அதே நேரத்தில் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் உள்ள பயணிகளுக்கு எந்த ரயில் எந்த நடைமேடையில் வருகிறது என தெரியாமல் ஒலிபெருக்கி மூலம் சொல்லும் போதே சென்று ரயில் ஏற வேண்டிய நிலையும் உள்ளது.