விளையாட்டுத்துறை அமைச்சர் பிறந்த நாளை முன்னிட்டு கடம்பத்தூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் அன்னதானம் மற்றும் இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் : மாவட்ட செயலாளர் வழங்கினார் :

பதிவு:2022-12-27 17:46:50

திருவள்ளூர் டிச 27 : தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திருவள்ளூர் மேற்கு மாவட்டம் கடம்பத்தூர் கிழக்கு ஒன்றியம் சார்பில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு திருவள்ளூர் எம்எல்ஏ., வி.ஜி.ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.மாவட்ட அவைத் தலைவர் கே.திராவிட பக்தன், மாநில விவசாய அணி துணைச் செயலாளர் ஆர்.டி.இ.ஆதிசேஷன், ஒன்றிய செயலாளர் கே.ஹரிகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். இதில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளரும் திருத்தணி எம்எல்ஏ.வுமான எஸ்.சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அன்னதானம் வழங்கினார். மேலும் விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்களையும் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் நிர்வாகிகள் மிதுன் சக்கரவர்த்தி, கே.செங்குட்டுவன், மெய்யழகன், ஜெகதம்மாள், வி.சி.ஆர்.குமரன், பி.கே.நாகராஜ், டி.திலீப்குமார், ஆர்.மோகனசுந்தரம், சரஸ்வதி சந்திரசேகர், என்.நந்தகோபால், ஆர்.ராஜேந்திரகுமார், ஏ.எஸ்.மணி, எஸ்.பாலசுப்பிரமணி, ஏ.மன்புகழ் மனோகரன், மதியழகன், எம்.சங்கர், ஆர்.டில்லி, எம்.சேகர், ஆனந்த், ஆர்.கார்த்தி, முத்து, சி.ஆர். மணி, தினேஷ், கோபி, ராமு, முத்துப்பாண்டி, டி.கார்த்தி, நித்தியானந்தம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.