பதிவு:2022-12-28 18:42:30
திருவாலங்காட்டிலுள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலை அருகே டிராக்டர்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கரும்பால் விபத்து ஏற்படும் அபாயம் : நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை :
திருவள்ளூர் டிச 28 : திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காட்டில் உள்ள திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு விவசாயிகள் கரும்பை கொண்டு வந்து அரவைக்காக வழங்குவது வழக்கம். இந்நிலையில் சர்க்கரை ஆலை அருகே திருவலங்காடு - சின்னம்மா பேட்டை சாலையில் கரும்புகளை ஏற்றி வந்த 30-க்கும் மேற்பட்ட டிராக்டர்களை நிறுத்தி வைத்திருப்பதால் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் ஆட்டோக்களில் செல்பவர்கள் வேலைக்கு செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.