பதிவு:2022-12-28 18:51:16
திருவள்ளூர் மேற்கு மாவட்ட தலைமை செயற்குழு உறுப்பினர் வி.ஜி ராஜேந்திரன் எம்எல்ஏ ஏற்பாட்டில் பேராசிரியர் நூற்றாண்டு நிறைவு விழா கருத்தரங்கம் : அமைச்சர் சா.மு. நாசர் தொடங்கி வைத்தார் :
திருவள்ளூர் டிச 28 : திருவள்ளூர் மேற்கு மாவட்ட தலைமை செயற்குழு உறுப்பினர் வி ஜி ராஜேந்திரன் எம்எல்ஏ ஏற்பாட்டில் பேராசிரியர் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு இனமானம்,தன்மானம்,தமிழ் மானம் என்ற தலைப்பில் கருத்தரங்கம் திருவள்ளூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.இந்த கருத்தரங்கிற்கு திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளரும் திருத்தணி எம்எல்ஏவு மான எஸ்.சந்திரன் தலைமை தாங்கினார்.