முக சிதைவால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்துக் கொண்ட சிறுமியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்போனில் மூலம் நலம் விசாரித்து கிறிஸ்துமஸ் வாழ்த்து :

பதிவு:2022-12-28 18:53:24

திருவள்ளூர் டிச 28 : திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த மோரை கிராமத்தை சேர்ந்த ஸ்டீபன்ராஜ் - சௌபாக்யா தம்பதியின் 9 வயது மகளான டானியாவுக்கு மூன்றரை வயதில் முகத்தில் கரும்புள்ளி தோன்றியது.இதனை சாதாரண ரத்தக்கட்டு என்று சிகிச்சை பெற்ற நிலையில், பாதிப்பு குறையவில்லை. ஆறு ஆண்டுகளாக பல மருத்துவமனைகள் ஏறி இறங்கி சிகிச்சை பெற்றும் சிறுமியின் ஒருபக்க முகம் சிதையத் தொடங்கியது.இதைத்தொடர்ந்து சிறுமி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சமுக வலைதளம் வாயிலாக உதவி கோரியிருந்தார்.