மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணிபுரியும் பணியாளர்கள் அனைவரும் வரும் 1 ம் தேதி முதல் மின்னணு வருகை பதிவு செய்யப்பட வேண்டும் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல் :

பதிவு:2022-12-29 16:15:15

திருவள்ளூர் டிச 29 : மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், திருவள்ளூர் மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் நடைபெற்று வருகிறது. இதில் தற்சமயம் 20 பணியாளர்களுக்கு மேல் வருகை இருப்பின் இதனை தேசிய கைப்பேசி வழி கண்காணிப்பு செயலியின் கீழ் வருகை பதிவு செய்யப்பட்டு புகைப்படத்துடன் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.

1.1.2023 முதல் மின்னணு வருகை பதிவேடு 20 பணியாளர்களுக்கு குறைவாக இருப்பினும் (தனிநபர் வேலைகள் தவிர) அந்தப் பணிகளுக்கான வருகை பதிவும் தேசிய கைப்பேசி வழி கண்காணிப்பு செயலியின் கீழ் பதிவு செய்யப்பட வேண்டும் என மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகம் அறிவித்துள்ளது.

மேலும், பணி செய்தமைக்கான நிதி பரிமாற்ற ஆணை மேற்படி வருகை பதிவேற்றத்தின்படியே கணக்கீடு செய்யப்பட்டு பணியாளர் ஊதியம் விடுவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.எனவே, ஊராட்சி மன்றத் தலைவர்கள், பணித்தள பொறுப்பாளர்கள், பணித்தள ஒருங்கிணைப்பாளர்கள், தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் இதனை அறிந்து இதற்கு ஒத்துழைப்பு நல்குமாறு மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ கேட்டுக்கொண்டுள்ளார்.