பதிவு:2022-12-29 16:21:44
திருத்தணி முருகன் கோவிலில் விஐபி க்களிடம் பணம் வாங்கிக் கொண்டு சிறப்பு தரிசனத்தில் அனுமதித்தும் சாதாரண பக்தர்களை தள்ளிவிட்டு அராஜகத்தில் ஈடுபடும் கோவில் பேஷ்கர்.(பிஆர்ஓ).
திருத்தணி முருகன் கோவிலில் விஐபி க்களிடம் பணம் வாங்கிக் கொண்டு சிறப்பு தரிசனத்தில் அனுமதித்தும் சாதாரண பக்தர்களை தள்ளிவிட்டு அராஜகத்தில் ஈடுபடும் கோவில் பேஷ்கர்.(பிஆர்ஓ).
திருவள்ளூர் டிச 29 : திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ளது ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக திகழும் அருள்மிகு சுப்ரமணியசாமி திருக்கோயில். இந்த கோயிலில் திருவள்ளூர் காஞ்சிபுரம் சென்னை வேலூர் திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆந்திரா கர்நாடகா புதுச்சேரி போன்ற பிற மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுவது வழக்கம்.
இந்நிலையில் திருத்தணியில் உள்ள முக்கிய பிரமுகர்களுக்கு விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுவதாக கோயில் இணை ஆணையர் விஐயா உத்தரவிட்டிருந்தார். இதனால் சிறப்பு தரிசனம் டிக்கெட் வாங்கியவர்கள் மட்டுமே தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் நேற்று வந்த விஐபிகளிடம் கோயில் பேஷ்கர் (பிஆர்ஓ) கணேசன் என்பவர் பணம் வாங்கிக் கொண்டு அவர்களை உள்ளே அனுப்புவதும் தரிசனம் முடிந்து வரும்போது அவர்களது செருப்புகளை கையில் எடுத்து கொடுப்பதும் சாதாரண ஏழை எளிய பக்தர்கள் உள்ளே செல்ல முயன்ற போது அவர்களை பிடித்து தள்ளுகிற வீடியோ வைரலாகி வருகிறது. கோயில் இணை ஆணையர் விஜயா விஐபி தரிசனத்திற்கு அனுமதி ரத்து செய்யப்பட்ட நிலையில் இந்த செயல் அவரின் உத்தரவின் மேல் நடைபெறுகிறதா அல்லது தனிப்பட்ட முறையில் இவர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்களா என்பதை தீர விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருத்தணி வாழ் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.