திருத்தணி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர் திருந்தி வாழும் நிலையில் போலீசார் கஞ்சா விற்பனை செய்ததாக வழக்குப் பதிவு : திருந்தி வாழும் தன்னை குடும்பத்துடன் நிம்மதியாக வாழ வாய்ப்பு வழங்ககோரி குடும்பத்துடன் டிஎஸ்பியிடம் மனு :

பதிவு:2022-12-29 16:23:50

திருவள்ளூர் டிச 29 : திருத்தணி ஒன்றியம் மத்துார் காலனி பகுதியைச் சேர்ந்தவர் உதயகுமார், இவருக்கு திருமணமாகி கவுதமி என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். உதயகுமார் சென்னை ஆவடி பகுதியில் டி.ஐ., சைக்கிள் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், உதயகுமாருக்கு கஞ்சா புகைக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த இரு ஆண்டுக்கு முன் ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து மத்துார் பகுதியில் விற்பனை செய்து வந்ததாக திருத்தணி போலீசார் உதயகுமாரை கைது செய்தனர்.

தொடர்ந்து ஜாமீனில் வெளியே வந்த உதயகுமார், தனியார் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் போலீசார் அடிக்கடி உதயகுமார் வீட்டிற்கு சென்று கஞ்சா விற்பனை செய்வதாகவும், அதனால் வழக்குப் பதிவு செய்யப்போவதாகவும் மிரட்டியுள்ளனர். இதையடுத்து உதயகுமார் தனது மனைவி, மகளுடன் திருத்தணி டி.எஸ்.பி., அலுவலகத்திற்கு சென்று, இனிவரும் நாட்களில், கஞ்சா புகைக்கவும், விற்பனை செய்யவும் மாட்டேன். நான் திருந்தி வாழ்வதற்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என மனு கொடுத்தார்.

மனுவை பெற்றுக் கொண்ட திருத்தணி டி.எஸ்.பி., தமிழ் விக்கேனஷ்மாறன், மாவட்ட எஸ்.பி., க்கு பரித்துரை செய்வதாக உறுதி கூறினார். அதனையடுத்து காவல் துறை சார்பில் யாரும் தொந்தரவு செய்யமாட்டார்கள் எனவும் டிஎஸ்பி உறுதியளித்தார்.