திருவள்ளூர் பேருந்து நிலைய வளாகத்தில் மின்கசிவி காரணமாக நள்ளிரவில் ரூ.5 லட்சம் மதிப்பிலான உணவுப் பொருட்கள், பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசம் :

பதிவு:2022-12-29 16:25:48



திருவள்ளூர் பேருந்து நிலைய வளாகத்தில் மின்கசிவி காரணமாக நள்ளிரவில் ரூ.5 லட்சம் மதிப்பிலான உணவுப் பொருட்கள், பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசம் :

திருவள்ளூர் பேருந்து நிலைய வளாகத்தில் மின்கசிவி காரணமாக நள்ளிரவில் ரூ.5 லட்சம் மதிப்பிலான உணவுப் பொருட்கள், பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசம் :

திருவள்ளூர் டிச 29 : திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட எம்ஜிஎம் நகரைச் சேர்ந்தவர் சேகர் மகன் தியாகராஜன். இவர் திருவள்ளூர் பேருந்து நிலையத்தில் உள்ளி நகராட்சிக் கடையில் ராகவேந்திரா பேக்கரி எனும் கடையை நடத்தி வருகிறார். இந்நிலையில் வழக்கம் போல் நேற்று இரவு 10 மணிக்கு மேல் கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் திருவள்ளூர் டவுன் ரோந்துப் படை போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது பேருந்து நிலையம் அருகே வந்து கொண்டிருந்த போது பேக்கரி கடை எரிந்துகொண்டிருப்பதை பார்த்துள்ளனர். இதனையடுத்து உடனடியாக ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தீயணைப்பு நிலையத்திற்கு நேரில் சென்று தீயணைப்பு வீரர்களை உடனடியாக அழைத்து வந்து தீயைக் அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதன் பிறகே இந்த தீவிபத்து குறித்து கடையின் உரிமையாளர் தியாகராஜனுக்கு போலீசார் தகவல் கொடுத்துள்ளனர். விரைந்து வந்து பார்த்த போது கடையில் இருந்த இனிப்பு, கூல்டிரிங்க்ஸ், பிஸ்கெட் போன்ற பேக்கரி பொருட்கள் அனைத்தும் முற்றிலும் எரிந்து போயிருப்பது தெரியவந்தது.

மேலும் கடையில் நேற்று வசூலான 35 ஆயிரம் ரூபாய் பணமும் எரிந்து போயிருந்தது. புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகை வர இருப்பதால் அதிகளவிலான உணவுப் பொருட்களை வாங்கி கடையில் வைத்திருந்ததாகவும், 5 லட்சம் மதிப்பிலான உணவுப் பொருட்கள், பிரிட்ஜ் உள்ளிட்டவை எரிந்து நாசமானதாகவும் கடை உரிமையாளர் தியாகராஜன் தெரிவித்தார். இது குறித்து திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மின் கசிவு காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தீவிபத்து ஏற்பட்ட பேக்கரி கடைக்கு எதிரில் பெட்ரோல் பங்க் உள்ள நிலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்ட போலீசார் விரைந்து செயல்பட்டு தீயைக் கட்டுப்படுத்தியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.