காக்களூரில் உணவு பாதுகாப்பு துறை சார்பில் டாஸ்மாக்கில் பணிபுரியும் விற்பனையாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கு உணவு பாதுகாப்பு மேற்பார்வையாளர்களுக்கான பயிற்சி முகாம் :

பதிவு:2022-12-29 16:28:39

திருவள்ளூர் டிச 29 : திருவள்ளூர் மாவட்டத்தில் கிழக்கு மேற்கு என இரு மாவட்டங்களில் மொத்தம் 360 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் திருவள்ளூர் மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட காக்களூரில் உள்ள டாஸ்மாக் குடோனில் உணவு பாதுகாப்பு துறை சார்பில் உணவு பாதுகாப்பு மேற்பார்வையாளர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.

தமிழக டாஸ்மாக் ஆணையர் லால் வேனா , மற்றும் டாஸ்மாக் மேலான் இயக்குனர் சுப்பிரமணியம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆகியோர் அறிவுறுத்தலின் பேரில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட டாஸ்மாக் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கு உணவு பாதுகாப்பு மேற்பார்வையாளர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.

இந்த பயிற்சி முகாமிற்கு உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ஜெகதீஷ் சந்திர போஸ் தலைமை தாங்கினார். திருவள்ளூர் உணவு பாதுகாப்பு அலுவலர் செல்வராஜ் மற்றும் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் கோ.கலைமன்னன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தமிழகத்திலேயே முதல் முறையாக நடைபெற்ற இந்த பயிற்சி முகாமில் 100-க்கும் மேற்பட்டபணியாளர்கள் பங்கேற்றனர். இந்த பயிற்சி முகாமில் உணவு பாதுகாப்பு குறித்தும் உணவுப் பொருட்களை கையாள்வது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

அதாவது டாஸ்மாக் கடையில் இருப்பு கையாள்வது எப்படி பொருட்களை பயன்படுத்த வேண்டிய காலக்கேடு ஆகியவற்றை கண்காணிப்பது எப்படி என்பது குறித்து பயிற்சி வழங்கப்பட்டது. ஒரு நாள் நடைபெறும் இந்த பயிற்சி முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு உணவு பாதுகாப்பு மேற்பார்வையாளருக்கான சான்றுகள் வழங்கப்படும்.அரசால் வழங்கப்படும் உணவு பாதுகாப்பு சான்றிதழ் (எப்ஐஎஸ்எஸ்ஐ) வைத்திருக்கும் அனைவரும் இந்த பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

திருவள்ளூர் மாவட்டத்தில் ஏற்கனவே அங்கன்வாடி பணியாளர்களுக்கு சத்துணவு திட்ட பணியாளர்களுக்கும் இந்த பயிற்சி வழங்கப்பட்ட நிலையில் தற்போது டாஸ்மாக் கடையில் பணிபுரியும் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.‌ அடுத்ததாக ஆவின் பணியாளர்களுக்கும் வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.மேலும் உணவு பாதுகாப்புத்துறை சார்பில் வழங்கப்பட்டிருக்கும் உரிமம் வைத்திருக்கும் அனைவரும் இந்த பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

தமிழகத்திலேயே முதல் முறையாக நடைபெற்ற இந்த பயிற்சி முகாமை தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடை விற்பனையாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கு சுழற்சி முறையில் நடைபெற உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.அரசு டாஸ்மாக் கடை மட்டுமல்லாமல் தனியார் மதுபான கடை நடத்துபவர்களும் இந்த பயிற்சி மேற்கொண்டிருக்க வேண்டும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் டாஸ்மாக் கிடங்கு மேலாளர் தமிழ்செல்வி, உதவி மேலாளர் என்.ரவி, கலால் மேற்பார்வை அலுவலர் ரேவதி மற்றும் டாஸ்மாக் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.