திருவள்ளூர் அருகே வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்தியதால் மாயமான மகளை கண்டுபிடித்து தருமாறு பெற்றோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க கோரிக்கை

பதிவு:2022-04-20 11:40:11



திருவள்ளூர் அருகே வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்தியதால் மாயமான மகளை கண்டுபிடித்து தருமாறு பெற்றோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க கோரிக்கை

திருவள்ளூர் அருகே வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்தியதால் மாயமான மகளை கண்டுபிடித்து தருமாறு பெற்றோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க கோரிக்கை

திருவள்ளூர் ஏப் 20 : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பழவேற்காடு கோட்டைக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் மணிவண்ணன். இவரது மகள் நந்தினிக்கும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தேசிங்கு என்பவருக்கும் இடையே கடந்த 2017-ல் திருமணம் செய்து வைத்துள்ளனர். இவர்களுக்கு வெற்றீஸ்வரன் என்ற 4 வயதில் ஒரு மகனும், வெற்றிவேல் என்ற ஒரு வயதில் மற்றொரு மகனும் உள்ளனர். ஆனால் கணவன் மனைவிக்குமிடையே தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

கணவர் தேசிங்கு,மாமியார் தேசம்மாள், மைத்துனர்கள் கார்த்திக்,பிரபு மற்றும் சின்னமாமியார், மாமனார் மணி ஆகியோர் பணம், நகை கேட்டு மகளை அடித்து துன்புறுத்தியுள்ளனர். இதே போல் பல முறை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்ததால் தனது மகள் ஐந்து முறை பொன்னேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் மன்னிப்பு கேட்டதால் மீண்டும் அனுப்பி வைத்துள்ளனர்.

இந்நிலையில் மீண்டும் பொன்னேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் கடந்த 7.1.2022 அன்று விசாரணைக்கு கணவர், மாமனார், மாமியார் , சின்னமாமியார் ஆகியோரை அழைத்து விசாரணை செய்து அவர்களை எச்சரித்தும் அனுப்பிய போது, அவர்களுடன் செல்லமாட்டான் என மகள் நந்தினி சொல்லவே, காவல் துறையினர் சமாதானப்படுத்தி அவர்களுடன் அனுப்பி வைத்தனர். இந்நிலையில் மகளை அனுப்பி வைத்த ஒரு வாரத்தில் மகளிடம் பேச தொடர்பு கொண்ட போது எந்த பதிலும் சொல்லாத நிலையில் மனைவி காணாமல் போனதாக துண்டு பிரசுரங்களை ஊர் முழுக்க ஒட்டியுள்ளதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இது குறித்து கேட்டபோது அவர்கள் எந்த பதிலும் சொல்லாமல் இருப்பதால் தனது மகளை மீட்டுத் தருமாறு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் நந்தினியின் பெற்றோர் மற்றும் சகோதரன் ஆகியோர் புகார் அளித்துள்ளனர். நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் உறுதி அளித்ததையடுத்து அவர்கள் அங்கிருந்து திரும்பி சென்ற