பதிவு:2023-01-03 21:50:02
திருத்தணி முருகன் கோவிலில் முன்னணி காமெடி நடிகர் யோகிபாபுவுக்கு சிறப்பு தரிசனத்தில் சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுப்பு : பத்திரிக்கையாளர்கள் ஏற்பாட்டில் சாமி தரிசனம் :
திருவள்ளூர் ஜன 02 : திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி முருகன் கோவிலில் திருப்படி திருவிழா மற்றும் புத்தாண்டையொட்டி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங்களிலிருந்து பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
இந்நிலையில் திரைப்படத்துறையில் முன்னணி காமெடி நடிகரான நடிகர் யோகி பாபு முருகரை தரிசனம் செய்வதற்காக திருத்தணி முருகன் கோவிலுக்கு வந்தார். அங்கே வி.ஐ.பி.க்கள் செல்லும் பாதையில் செல்வதற்காக சுமார் ஒரு மணி நேரம் காத்திருந்தார். ஆனால் கோவில் நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தும் அவரை அனுமதிக்காமல் காலம் தாழ்த்தினர். இதனால் தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் யோகி பாபுவை கண்டவுடன் அவருக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தனர். அவருடன் செல்பி எடுத்துக் கொண்டும் கை குலுக்கியும் வாழ்த்துக்கள் தெரிவித்து மகிழ்ந்தனர்.
இதனால் அங்கு கூடியிருந்த பக்தர்கள் செல்பி எடுக்க முண்டியடித்ததால் கூட்ட நெரிசல் காரணமாக போலீசார் செய்வதறியாது தவித்தனர். இதனையடுத்து பக்தர்கள் சாமி தரிசனம் முடிந்து இறங்கி வரும் வழியில் பத்திரி்க்கையாளர்கள் சிலர் யோகிபாபுவை அழைத்துச் சென்று சாமி தரிசனம் செய்ய வைத்தனர். சாமி தரிசனம் செய்த பிறகு திருத்தணி முருகன் கோயிலிலிருந்து புறப்பட்டு சென்றார்.