திருவள்ளூரில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு, பள்ளி செல்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த துண்டு பிரசுரம் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்டார் :

பதிவு:2023-01-03 21:53:15



திருவள்ளூரில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு, பள்ளி செல்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த துண்டு பிரசுரம் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்டார் :

திருவள்ளூரில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு, பள்ளி செல்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த துண்டு பிரசுரம் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்டார் :

திருவள்ளூர் ஜன 02 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பள்ளி செல்லா குழந்தைகளை கணக்கெடுப்பு குறித்த கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் 6 முதல் 18 வயதிற்குட்பட்ட பள்ளி செல்லா குழந்தைகளை கணக்கெடுக்கும் வகையிலும், பள்ளி செல்வது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர் ஏற்படும் வகையிலும் பள்ளிக்கல்வித்துறை சார்பாக தயாரிக்கப்பட்ட சிகரம் தொடு என்ற தலைப்பிலான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்டார்.

கட்டாய கல்வி உரிமைச் சட்டம் மூலம் அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி அளிக்க வேண்டும். அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மூலமாக குடியிருப்புகள் தோறும் பள்ளி செல்லா, இடைநின்ற குழந்தைகள் 6 முதல் 18 வயது வரை உள்ள குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் (0-19 வயது) கணக்கெடுப்பு நடத்துதவதற்கான பணிகள் கடந்த 19-ஆம் தேதி தொடங்கியது.

தொடர்ந்து ஜனவரி 11-ஆம் தேதி வரையில் நடைபெற உள்ளது. தற்போதைய நிலையில் இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.இப்பணியில் அந்தந்த பகுதிகளில் செயல்பட்டு வரும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், வட்டார வளமைய மேற்பார்வையாளர், ஆசிரியர் பயிற்றுநர், சிறப்பாசிரியர்கள், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், கிராம செவிலியர்கள் ஆகியோர் மூலம் மேற்கொள்ளப்படுகிறது.

அப்போது, நீண்ட நாள் பள்ளிக்கு வராத மாணவர்கள், கொரோனா காலகட்டத்தில் பெற்றோர்களை இழந்த மாணவர்களின் விவரங்களை சேகரிப்பது அவசியம். இதற்கிடையே 5-ஆம் வகுப்பு முடித்தவர்கள் 6-ஆம் வகுப்பிலும், 8-ஆம் வகுப்பு முடித்தோர் 9-ஆம் வகுப்பிலும் சேர்ந்துள்ளார்களா என்பதை முதலில் கண்டறிய வேண்டும்.அதேபோல், புலம் பெயர்ந்த குழந்தைகள், பெண் குழந்தைகள், 3-ஆம் பாலினத்தவர் யாரேனும் பள்ளி செல்லாமல் இருக்கின்றார்களா என்பதில் சிறப்பு கவனம் செலுத்தவும் வேண்டும். நாள்தோறும் சேகரிக்கப்படும் தகவல்களை அதற்கான இணையத்தில் பதிவேற்றம் செய்யவும் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வலியுறுத்தினார்.

இதில் மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் (இணைய வழி குற்றப்பிரிவு) எம்.மீனாட்சி, மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் எஸ்.கே.லலிதா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் எம்.நிஷாந்தினி, குழந்தை பாதுகாப்பு நலக்குழு தலைவர் மேரி அக்சீலியா, முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் ச.மலர்கொடி, ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கந்தசாமி, ஐ.ஆர்.சி.டி.எஸ் தொண்டு நிறுவன இயக்குநர் பி.ஸ்டீபன் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.