திருநின்றவூரில் 1227 மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்த 13,620 உறுப்பினர்களின் ரூ30.98 கோடி மதிப்பீட்டிலான கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான சான்றிதழ்கள் : பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார் :

பதிவு:2023-01-03 21:59:53



திருநின்றவூரில் 1227 மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்த 13,620 உறுப்பினர்களின் ரூ30.98 கோடி மதிப்பீட்டிலான கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான சான்றிதழ்கள் : பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார் :

திருநின்றவூரில் 1227 மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்த 13,620 உறுப்பினர்களின் ரூ30.98 கோடி மதிப்பீட்டிலான கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான சான்றிதழ்கள் : பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார் :

திருவள்ளூர் ஜன 02 : திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் வளாகத்தில் கூட்டுறவுத் துறை சார்பாக நடைபெற்ற விழாவில் மாவட்டம் முழுவதும் உள்ள நகர கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் 23 கிளைகள் மற்றும் நகர கூட்டுறவு கடன் சங்கங்கள் என மொத்தம் 100 கூட்டுறவு நிறுவனங்களில் கடன் பெற்று நிலுவையில் இருந்த 1227 மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்த 13,620 உறுப்பினர்களின் ரூ30.98 கோடி மதிப்பீட்டிலான கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான சான்றிதழ்களை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தலைமை தாங்கினார்.மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் முன்னிலை வகித்தார்.

தமிழகத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான கடன்களின் நிலுவைத் தொகையில் அபராத வட்டி மற்றும் இதர செலவினங்கள் தவிர்த்து, அசல் ரூ.2459.57 கோடி மற்றும் வட்டி தொகை ரூ.215.07 கோடியும் சேர்த்து மொத்தம் ரூ.2674.64 கோடியை தள்ளுபடி செய்து ஆணையிட்டார்.

இதில் முதற்கட்டமாக திருவள்ளூர் மாவட்டத்தில் நிலுவையிலிருந்த மகளிர் சுய உதவிக் குழு கடன்கள் அசல், வட்டி, அபராத வட்டி, இதர செலவினங்கள் உட்பட அனைத்து இனங்களும் தள்ளுபடி செய்வதற்கான சரிபார்ப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. முதலில் துறை அலுவலர்களைக் கொண்டு 100 சதவிகிதம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து, வெளி மாவட்டத்திலிருந்து கூட்டுறவுத் தணிக்கை துறை அலுவலர்களை கொண்டு 100 சதவிகிதம் மீண்டும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, தள்ளுபடி செய்யப்படும் தொகை இறுதி செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர் நகர கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், காஞ்சிபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மாவட்டத்தை சேர்ந்த 23 கிளைகள் மற்றும் நகர கூட்டுறவு கடன் சங்கங்கள் என மொத்தம் 100 கூட்டுறவு நிறுவனங்களில் கடன் பெற்று நிலுவையிலிருந்த 1227 மகளிர் சுய உதவிக் குழுக்களை சேர்ந்த 13,620 பயனாளிகளுக்கு அசல் தொகை ரூ.27.80 கோடியும், வட்டி ரூ.2.98 கோடியும் அபராத வட்டி ரூ.19 இலட்சமும் மற்றும் இதர செலவினம் 1 இலட்சமும் என மொத்தம் ரூ.30.98 கோடி தள்ளுபடி செய்யப்பட்டதற்கான சான்றிதழ்களை பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் முன்னிலையில் வழங்கி பேசினார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் 01.4.2022 முதல் 30.11.2022 வரை மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் திருவள்ளுர் மாவட்டத்தினை சேர்ந்த 23 கிளைகள் மூலம் 410 குழுக்களுக்கு 4920 உறுப்பினர்களுக்கு ரூ.1332.31 இலட்சமும், 122 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் 445 குழுக்களுக்கு 5340 உறுப்பினர்களுக்கு ரூ.2209.23 இலட்சமும், திருவள்ளூர் நகர கூட்டுறவு வங்கியின் மூலம் 6 குழுக்களுக்கு 71 உறுப்பினர்களுக்கு ரூ.17.75 இலட்சமும், பொன்னேரி நகர கூட்டுறவு சங்கம் மற்றும் நூம்பல் நகர கூட்டுறவு கடன் சங்கங்களை சேர்ந்த 34 குழுக்களுக்கு 537 உறுப்பினர்களுக்கு ரூ.242.22 இலட்சமும் என மொத்தம் நடப்பு நிதியாண்டில் திருவள்ளுர் மாவட்டத்தில் கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் 895 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 10,868 உறுப்பினர்களுக்கு ரூ.38.01 கோடி அளவிற்கு மகளிர் சுய உதவிக்குழு கடன் வழங்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

இவ்விழாவில், பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி, மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் தேசிங்கு, காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி கூடுதல் பதிவாளர் மு.முருகன், மண்டல இணைப்பதிவாளர் தி.சண்முகவள்ளி, திருநின்றவூர் நகர மன்ற தலைவர் உஷாராணி ரவி, துணைப் பதிவாளர் பா.காத்தவராயன், உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள், பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.