பதிவு:2023-01-03 22:08:30
பொதுமக்கள் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணிபுரிபவர்கள் குறைகள் மற்றும் புகார்கள் அளிக்கலாம் : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல் :
திருவள்ளூர் ஜன 03 : மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தின் 27வது பிரிவின் கீழ் குறைகளை நிவர்த்தி செய்வதற்கும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான புகார்களை தீர்ப்பதற்கு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு குறைத்தீர்ப்பாளர் பணி உருவாக்கப்பட்டுள்ளது.
அதன்படி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் குறைகளை தீர்ப்பதற்காக சைமன் அருள் பிரகாசம் திருவள்ளூர் மாவட்டத்திற்கான குறை தீர்ப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருடைய கைபேசி எண் 8925811340 மற்றும் மின்னஞ்சல் முகவரி simon07071972@gmail.com பொதுமக்கள் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணிபுரிபவர்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் தொடர்பான குறைகள் மற்றும் புகார்கள் ஏதும் இருப்பின் மேற்கண்ட குறை தீர்ப்பாளரின் தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் முகவரி மூலம் புகார் அளிக்கலாம் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.