பதிவு:2023-01-03 22:12:57
திருத்தணியில் கல்லூரி மாணவனுக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்ற போது மருத்துவர்கள் அலட்சியம் : மாணவனின் உறவினர்கள் குற்றச்சாட்டு :
திருவள்ளூர் ஜன 03 : திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி இந்திரா நகர் பகுதியை சேர்ந்த கோவிந்தன் கஸ்தூரியின் மகன் சந்தோஷ். இவர் திருத்தணி அரசு கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் கல்லூரி முடிந்து வீட்டிற்கு வந்த சிறிது நேரத்தில் வீட்டில் திடீரென மயக்கம் அடைந்து கீழே விழுந்துள்ளார்.
அதனால் வலிப்பு நோய் ஏற்பட்டுள்ளது.இதனையடுத்து உடனடியாக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்துள்ளனர். ஆனால் முதல் சிகிச்சை அளித்த மருத்துவர்கள் ஆம்புலன்ஸ் இல்லாத நிலையில் அதற்கான ஏற்பாடுகளை செய்யாமல் 2 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.
முதல் சிகிச்சைக்குப் பின் மேல் சிகிச்சைக்காக திருவள்ளூருக்கோ, சென்னைக்கோ ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் zomato வில் உணவு ஆர்டர் செய்து மருத்துவர்கள் சாப்பிடுவதாக மாணவனின் நண்பர்கள் உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இரண்டு மணி நேரத்திற்கு மேலாகியும் நடவடிக்கை எடுக்காத மருத்துவர்களின் அலட்சியத்தால் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் குற்றஞ்சாட்டுகின்றனர்.