திருவள்ளூர் அடுத்த சீயஞ்சேரி கிராமத்தில் மாடலிங் செய்து வரும் திருமணமான பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த ஆட்டோ ஓட்டுனர் உள்ளிட்ட மூன்று பேர் கைது :

பதிவு:2023-01-03 22:14:37



திருவள்ளூர் அடுத்த சீயஞ்சேரி கிராமத்தில் மாடலிங் செய்து வரும் திருமணமான பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த ஆட்டோ ஓட்டுனர் உள்ளிட்ட மூன்று பேர் கைது :

திருவள்ளூர் அடுத்த சீயஞ்சேரி கிராமத்தில் மாடலிங் செய்து வரும் திருமணமான பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த ஆட்டோ ஓட்டுனர் உள்ளிட்ட மூன்று பேர் கைது :

திருவள்ளூர் ஜன 03 : திருவள்ளூர் அடுத்த காக்களூர் பைபாஸ் சாலையில் வசிக்கும் மாடலிங் செய்து வருபவர் 26 வயது இளம்பெண். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளன.அதேபோல் திருவள்ளூர் அடுத்த சீயஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் விஜய். ஆட்டோ ஓட்டுனரான இவர் , இளம் பெண் மாடலிங் செய்வதற்காக செல்லும் இடங்களுக்கு அழைத்து செல்வதும், பிறகு அங்கிருந்து வீட்டிற்கு கொண்டு வந்து விடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இதனால் ஆட்டோ ஓட்டுனரான விஜய்க்கும் இளம் பெண்ணிற்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நட்பாக பழகி வந்ததாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு இளம்பெண்ணை விஜய் வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது.இந்நிலையில் நேற்று முன்தினம் மாடலிங் செய்வதற்காக ஆட்டோ ஓட்டுனர் விஜய் இளம்பெண்ணை அழைத்து சென்றவர் மீண்டும் வீட்டிற்கு கொண்டு வந்து விடாமல் அவர் குடியிருக்கும் சீயஞ்சேரியில் உள்ள தனது வீட்டிற்கு வலுக்கட்டாயமாக அழைத்து சென்றுள்ளார்.

அங்கே விஜய் வீட்டில் இருந்த அவனது நண்பர்களான சாம்ராஜ், சதீஷ் மற்றும் விஜய் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.மேலும் இது குறித்து வெளியே தெரிவித்தால் கொலை செய்து விடுவதாகவும் இளைஞர்கள் மூன்று பேரும் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளனர்.

இது குறித்து இளம்பெண் புல்லரம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் கமலஹாசன் தலைமையிலான போலீசார் கூட்டு பலாத்காரத்தில் ஈடுபட்ட விஜய், சாம்ராஜ் ,சதீஷ் ஆகிய மூன்று பேரையும் கடத்தல் பாலியல் பலாத்காரம் கூட்டு, பாலியல் பலாத்காரம் தாக்குதல் கொலை மிரட்டல் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.திருமணமான, மாடலிங் செய்து வரும் பெண்ணை நண்பர்களுடன் இணைந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.