பதிவு:2024-05-26 23:36:52
திருவள்ளூர் அடுத்த பட்டரை கிராமத்தில் ஸ்ரீஎல்லையம்மன் கோயிலில் 34ம் ஆண்டு ஜாத்திரை விழா.
திருவள்ளூர், மே 26 திருவள்ளூர் அடுத்த மேல் ம நல்லாத்துார் ஊராட்சி ம் பட்டரை கிராமத்தில் ள் உள்ள எல்லையம்மன் சு. ஆலயத்தில் 34 ம் ஆண்டு ஜாத்திரை திருவிழாநடை பெற்றது. இந்த விழாவை முன்னிட்டு கடந்த 14ம்தேதி ஸ்ரீகங்கை அம்மனுக்கு அபி ஷேகம், அலங்காரம், கூழ் வார்த்தல் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து மலர் அலங்காரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்குகாட்சி கொடுத்தார். பொங்கல் வைத்து வழிபட்டனர். மறு நாள் ஸ்ரீ பொன்னி அம்ம னுக்கு பொங்கல் வைத்து வழிபட்டனர்.
நேற்று சனிக்கிழமை ஸ்ரீகங்கை அம்மனுக்கு கூழ் , வார்த்தலும் பிறகு புஷ்ப அலங்காரத்தில், வீதி உலா வந்து மக்களுக்கு காட்சி வழங்கினார். இரவு 7மணி அளவில், வ. பாலா (எ) பாலயோகி, சுனிதா பல யோகி, நா.வெங்கடேசன், இ.தினேஷ்குமார், கே.பி. அரிபாபு ஆகியோர் உபயத் தில் கச்சேரி நடைபெற்றது. இன்று காலை அம்மனுக்கு அடித்தண்டம் போடுதல், பக்தர்கள் கொக்கி குத்தி ரதம் இழுத்தல் நடை பெற்றது. பிறகு 3 ஆயிரம் பேருக்கு சமபந்தி விருந்து வழங்கப்பட்டது. இதையடுத்து அம்மன் குடத்துடன்
மஞ்சள் நீராடுதலும் பகல் 2 மணிக்கு அம்மன் தாய் வீடு படையலுக்கு சென்று வருதலும் நடைபெற்றது. மாலை பக்கோர் குத்துத லும் தொடர்ந்து கத்தி மரம் ஏறுதல் நிகழ்ச்சியும் இரவு 9 மணிக்கு எல்லையம்மன் விசேஷ அலங்காரத்துடன் வீதி உலாவும் தொடர்ந்து வாணவேடிக்கை நிகழ்ச் சியும் நடைபெறுகிறது. இன்று இரவு 10 மணிக்கு தெருக்கூத்து நாடகமும் திங்கட்கிழமை கங்கை அம்மன் குளக்கரையில் குடம் களைப்பு நிகழ்ச்சி யும் நடைபெறுகிறது. 2ம் தேதி விடையாற்றி உற்ச வம் நடைபெறுகிறது.