பதிவு:2024-06-22 11:59:18
திருவள்ளூரில் பள்ளி இடைநிற்றவர்களுக்கான தொழில்நெறி வழிகாட்டி மற்றும் வேலை வாய்ப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி :
திருவள்ளூர் ஜூன் 22 : திருவள்ளூர் ஐ.ஆ.சி.டி.எஸ். தொண்டு நிறுவனத்தில் திருவள்ளூர் மாவட்ட வேலை வாய்ப்பு மையம் மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மற்றும் ஐ. ஆர். சி. டி. எஸ். தொண்டு நிறுவனம் இணைந்து நடத்திய பள்ளி இடைநின்றவர்களுக்கான தொழில் நெறி வழிகாட்டுதல் மற்றும் வேலை வாய்ப்பு குறித்து வேலைவாய்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் குமார் மற்றும் ஷீலா ஆகியோர் கலந்து கொண்டு பள்ளி படிப்பை இடையில் நிறுத்திய சிறுவர்கள் மற்றும் சிறுமியர்களுக்கு பள்ளி படிப்பை தொடருவதின் அவசியம், உயர்கல்விக்கான வாய்ப்புகள், அரசு போட்டி தேர்வில் பங்கேற்பதற்கான பயிற்சிகள், வேலைவாய்ப்பினை பெறுவதற்கான வழிவகைகள், வேலை வாய்ப்பிற்கான ஆன்லைன் போர்டல் பதிவு செய்யும் முறை குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அதனைத் தொடர்ந்து ஐ. ஆர். சி. டி. எஸ். தொண்டு நிறுவனத்தின் நிர்வாகச் செயலாளர் ஸ்டீபன், திட்ட மேலாளர் விஜயன் ஆகியோர் தொழில் இலக்கு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் குறித்து ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக ஆலோசனை வழங்கினர். இதில் களப்பணியாளர்கள் தபித்தாள், பூங்கொடி, கவிதா, ரேவதி மற்றும் பவானி ஆகியோர் கலந்து கொண்டனர்.