பதிவு:2024-06-22 12:02:38
திருவள்ளூர் ஸ்ரீ நிகேதன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 10-வது சர்வதேச யோகா தினம் :
திருவள்ளூர் ஜூன் 22 : திருவள்ளூர் ஸ்ரீ நிகேதன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 10-வது சர்வதேச யோகா தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.விழாவிற்கு பள்ளி தாளாளர் விஷ்ணு சரண் தலைமை தாங்கினார்.முதன்மைச் செயல் அலுவலர் பரணிதரன் முன்னிலை வகித்தார்.பள்ளி மாணவ, மாணவர்களையும், ஆசிரியர்களையும் பள்ளி முதல்வர். ஸ்டெல்லா ஜோசப் வழிநடத்தி அனைவரையும் வரவேற்றார்.
விழாவில் ஹார்ட் ஃபுல்னஸ் மெடிடேஷன் ட்ரெயினரான சி.ஆர்.ராஜசேகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு யோகக் கலையினுடைய சிறப்பினை எடுத்துரைத்தார்.
மேலும் யோகா மனிதனை மனதளவிலும் உடலளவிலும் தூய்மையானவராக மாற்றும் என்பதையும், யோகக்கலை நம் இந்திய தேசத்தின் பாரம்பரியக் கலை என்றும், யோகமே இந்த உலகை ஆட்சி செய்கின்றது என்றும், ஒவ்வொரு தனி மனிதனும் யோகக் கலையை கற்றுக் கொண்டால் மருத்துவம் என்பது தேவையில்லை என்பதைப் பற்றியும் தெளிவாக எடுத்துரைத்தார்.யோக ஜோதி. தயாளன் மாணவர்களுக்கு யோகப் பயிற்சி அளித்தார்,
இறுதியாக பள்ளி துணை முதல்வர்.கவிதா கந்தசாமி,தலைமையாசிரியர் சுஜாதா ஆகியோர் நன்றி கூறினர்.