பதிவு:2024-06-25 19:19:15
கடம்பத்தூர் ஒன்றியம் விடையூர் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ வடபாதி செல்லியம்மன் ஆலயத்தின் 48ஆம் ஆண்டு தீமிதி திருவிழா விமர்சையாக நடைபெற்றது.
திருவள்ளூர் ஜூன் 25- திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் விடையூர் கிராமத்தில் உள்ளது அருள்மிகு ஸ்ரீ வடபாதி செல்லியம்மன் ஆலயம் . வேண்டிய வரத்தை தரக்கூடிய கிராம தேவதையான இந்த கோயிலில் தீமிதி திருவிழா கடந்த 14 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது . இதனையடுத்து நாள்தோறும் காலை மாலை வேலைகளில் அம்மன் வீதி உலா வந்து அருள் பாலித்தார். அதனைத் தொடர்ந்து இன்று தீமிதி திருவிழா நடைபெற்றது. இதில் 200க்கும் மேற்பட்டோர் தீமிதித்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர். இந்த தீமிதி திருவிழாவில் விடையூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர்.