சிறப்பு கிராம சபை கூட்டம்.

பதிவு:2024-07-31 20:24:29



சிறப்பு கிராம சபை கூட்டம்.

திருமழிசை ஜூலை 3- திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட் சிகளிலும் ஜூலை 2ம் தேதி சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்தப்பட வேண்டும் என கலெக்டர் த.பிரபுசங்கர் ஏற் கனவே அறிவித்திருந்தார்.

அதன்படி சிறப்பு கிராம சபை கூட்டம் பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியம் நேமம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தலைவர் பிரேம்நாத் தலைமையிலும், செம்பரம்பாக்கம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில், தலைவர் வி.சாந்தி தலைமையிலும், குத்தம்பாக்கம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தலைவர், ராஜசேகர் தலைமையிலும் மற்றும் ஒன்றி முழுவதும் அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர்களின் தலைமையில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது இந்த சிறப்பு கிராம சபை கூட்டத்தில், கலைஞர் கனவு இல்லம், ஊரக வீடுகள் பழுதுபார்த்தல், நிலுவை பயனாளிகளின் இதர சேவைகள் மற்றும் விடுபட்டு வீடுகளுக்கான மனுக்களையும் பெற்றனர்.