திருவள்ளூர் அடுத்த வயலூர் கிராமத்தில் அமைந்துள்ள 1000 ஆண்டுகள் பழமையான வயலூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சேமாத்தம்மன் , மந்தவெளி அம்மன் மற்றும் விக்ன விநாயகர் உள்ளிட்ட 5 கோவில்களிலும் ஒரே நேரத்தில் மகா கும்பாபிஷேகம் விழா கோலாகலமாக நடைபெற்றது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் பெற்றனர்.

பதிவு:2024-07-07 22:03:17



வயலூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சேமாத்தம்மன் , மந்தவெளி அம்மன் மற்றும் விக்ன விநாயகர் உள்ளிட்ட 5 கோவில்களிலும் ஒரே நேரத்தில் மகா கும்பாபிஷேகம் விழா கோலாகலமாக நடைபெற்றது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் பெற்றனர்.

திருவள்ளூர் ஜூலை 7 - திருவள்ளூர் அடுத்த வயலூர் கிராமத்தில் அமைந்துள்ள 1000 ஆண்டுகள் பழமையான பிரசித்தி பெற்ற ஸ்ரீ சேமாத்தம்மன் , மந்தவெளி அம்மன் மற்றும் விக்ன விநாயகர் உள்ளிட்ட 5 கோவில்களிலும் ஒரே நேரத்தில் மகா கும்பாபிஷேகம் விழா கோலாகலமாக நடைபெற்றது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் பெற்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் அடுத்த வயலூர் கிராமத்தில் அமைந்துள்ள 1000 ஆண்டுகள் பழமையான பிரசித்தி பெற்ற சேமாத்தம்மன் ,மந்தவெளி அம்மன் மற்றும் விக்ன விநாயகர், பீமேஸ்வரர் சொர்ணாம்பிகை, நவகிரக உள்ளிட்ட ஐந்து கோவில்களும் புதிதாக புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி அனைத்து கோயில்களும் 30 லட்சம் ரூபாய் அளவில் புதிதாக புதுப்பிக்கப்பட்டு பணிகள் முடிவடைந்த நிலையில்.

ஐந்து கோயில்களுக்கும் ஒரே நாளில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான பந்தல்கால் முகூர்த்தம் கடந்த மாதம் வியாழக்கிழமை 27 ந் தேதி தொடங்கியது.

சேமாத்தம்மன் கோவில் அருகில் 33 குண்டங்கள் கொண்ட யாகசாலை அமைக்கப்பட்டு மகா கணபதி ஹோமத்துடன் பூஜைகள் தொடங்கின.

அதனைத் தொடர்ந்து லட்சுமி பூஜை கோமாதா பூஜை, மகா கணபதி ஹோமம் மகாலட்சுமி ஓமாம் நவகிரக ஓமம் பூர்ணகிரி துபாய் நைவேத்தியம் ஆராதனை நடைபெற்றது.

கும்பாபிஷேக விழாவான இன்று காலை ஆறு கால யாக பூஜை செய்யப்பட்டது. பின்னர் 9.30 மணிக்கு யாக சாலையில் இருந்து புனிதநீர் எடுத்து வரப்பட்டு கோவில்களின் கோபுர விமான கலசத்தின் மீது புனிதநீர் ஊற்றப்பட்டு ஐந்து கோவில்களிலும் ஒரே நேரத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கோவில் கோபுரத்தின் மீதுள்ள கலசத்தின் மீது புனித நீரால் அபிஷேகம் செய்யும் முன்பாக வானத்தில் 5 கருடங்கள் வட்டமிட்டு ஆசிர்வதித்தது கண்டு பக்தர்கள் பரவசமடைந்து கோவிந்தா கோவிந்தா என கோஷமிட்டனர்.

விழாவில் வயலூர் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, கும்பாபிஷேகத்தை தரிசித்தனர். அவர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.

விழாவையொட்டி பக்தர்களுக்கு அறுசுவை அன்னதானம் கான்ஸ்டருக்ஷன்ஸ் .

ஐந்து கோவில்களும் ஒரே நேரத்தில் கும்பாபிஷேகம் நடந்த போது ஐந்து கருடங்கள் வானத்தில் வட்டமிட்டு ஆசி வழங்கியது பக்தர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.