திருமழிசையில் மத்திய அரசு பட்ஜெட் ஏமாற்றத்தை கண்டித்து அனைத்துக் கட்சிகளின் கண்டன ஆர்ப்பாட்டம்

பதிவு:2024-07-31 12:46:04



திருமழிசையில் மத்திய அரசு பட்ஜெட் ஏமாற்றத்தை கண்டித்து அனைத்துக் கட்சிகளின் கண்டன ஆர்ப்பாட்டம்

திருமழிசை ஜூலை 31- திருமழிசை சிவன் கோயில் அருகே அனைத்துக் கட்சிகளின் சார்பாக மத்திய அரசு பட்ஜெட்டில் தமிழ்நாட்டை புறக்கணித்த பாரதிய ஜனதா கட்சி கட்சியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் தந்தை பெரியார் திராவிட இயக்கம் திருவள்ளூர் மாவட்ட துணை செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கி நாகராஜன் மா.ரெ.ராஜ்குமார், மா.கண்ணதாசன், து.சுதர்சன், து.வெங்கடேசன், ஆவடி நாகராசன், முன்னிலை வகித்தனர். கண்டன ஆர்ப்பாட்ட நிகழ்ச்சியில் தோழர் தமிழ் சாக்ரடீஸ் பட்ஜெட் ஏமாற்றத்தை கண்டித்து பெரும் கண்டன உரையாற்றினார்.

மக்கள் தேசம் கட்சியின் ஜி.கே.வசந்த், வழக்கறிஞர் பிரசாந்த், கி ராமச்சந்திரன், மக்கள் குடியரசு இயக்கம், தம்பி மண்டேலா, விடுதலை சிறுத்தைகளின் கட்சி, சகாயம், எம்.அன்பு, புருஷோத்தமன், தாஸ், ஏ.மோகன், ஆகியோர் கண்டன உரை ஆற்றினர். கண்டன ஆர்ப்பாட்ட இறுதியில் தந்தை பெரியார் திராவிட கழக நகர செயலாளர் திருமழிசை சுகுமார் நன்றி கூறினார்.