கிராம சபை கூட்டம்

பதிவு:2024-08-16 18:37:38



கிராம சபை கூட்டம்

திருமழிசை ஆக 16: 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 526 ஊராட்சிகளிலும் சிறப்பு கிராமசபை கூட்டம் நடத்த மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தி இருந்தனர் அதன்படி பூந்தமல்லி ஒன்றியத்துக்கு உட்பட்ட செம்பரம்பாக்கம் ஊராட்சியில், ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி வின்சண்ட் தலைமையில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கிராம சாலை விரிவாக்கம், கிராமங்களுக்கு சுத்தமான குடிநீர், மேல்நிலைத் தொட்டி, சமுதாயக்கூடம் , வசிக்கும் மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா , செம்பரம்பாக்கம் காலனி பகுதியில் உள்ள சுடுகாட்டிற்கு சிமெண்ட் சாலை ஆகிய வளர்ச்சி பணிகள் பற்றி விவாதிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதேபோன்று பூந்தமல்லி ஒன்றியத்துக்கு உட்பட்ட நேம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் ஜி பிரேம்நாத் தலைமையிலும், குத்தம்பாக்கம் ஊராட்சியில் தலைவர் ராஜசேகர், தலைமையிலும், ஒன்றிய கவுன்சிலர் மாரிமுத்து முன்னிலையிலும் மற்றும் வயலா நல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் துரைமுருகன் தலைமையிலும், அகர மேல் ஊராட்சி மன்ற தலைவர் சங்கர் தலைமையிலும் படூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி தலைமையிலும், வரதாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் கலையரசன் தலைமையிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

வட்டார வளர்ச்சி அலுவலர் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஊராட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலாளர் நன்றி கூறினார்.